PRESS RELEASE - 28 June 2024
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் ஜப்பானிய விஞ்ஞானிகளுடன் இணைந்து சோரியாசிஸ் நோய்க்கு நியூரீபிக்ஸ் பீட்டா குளுக்கான் மூலம் புதிய தீர்வு கண்டுபிடிப்பு.
ஸ்வீடனில் நடந்த IFPA உலக சோரியாசிஸ் மாநாட்டில் முடிவுகள் பகிர்வு.
28, ஜூன், 2024; சோரியாசிஸ் தோல் நோயால் பாதிக்கப்பட்டோர், 28 நாட்களுக்கு நியூ ரீபிக்ஸ் பீட்டா குளுக்கான் (Neu REFIX Beta glucan) உட்கொண்டதைத் தொடர்ந்து, நோயின் அறிகுறிகளில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி தோல்மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் ஜே. ததேயுஸ் குழுவினர் ஜப்பானிய விஞ்ஞானிகளின் ஆலோசனையோடு, நடத்திய மருத்துவ ஆராய்ச்சியின் முடிவுகள், ஜூன் 27~29ல் ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற சர்வதேச தடிப்புத் தோல் அழற்சி சங்கங்களின் 7வது உலக சோரியாசிஸ் மற்றும் சோரியாடிக் ஆர்த்ரிடிஸ் மாநாட்டில் பகிரப்பட்டது. (IFPA; International Federation of Psoriasis Association; The 7th World Conference of Psoriasis and Psoriatic Arthritis). திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் நோயியல் துறை பேராசிரியர் டாக்டர் ஜே. சுரேஷ் துரை மற்றும் ஜப்பானின் ஹொக்கைடோவில் உள்ள ஒபிஹிரோ மருத்துவமனையின் நோயியல் பகுப்பாய்வு நிபுணர் டாக்டர் இச்சிரோ மியுரா ஆகியோர், நோய் அறிகுறிகளில் ஏற்பட்ட வெளிப்படையான முன்னேற்றத்தை, பாதிக்கப்பட்ட தோல் பகுதி திசுக்களின் உள்விளைவுகளை நுணுக்கமாக ஆராய்ந்து உறுதிசெய்துள்ளனர்.
சோரியாசிஸ் என்பது பல காரணிகளால் ஏற்படும் அழற்சி தோல் நோயாகும். இது மொத்த மக்கள்தொகையில் 2-3 சதவிகிதம் பேரை பாதிக்கிறது. இவர்களில் சுமார் 20-30 சதவிகிதம் நோயாளிகள், மூட்டுகளையும் தாக்கும் சோரியாடிக் ஆர்த்ரைடிஸ் நோய் பாதிப்புக்குள்ளாகின்றனர். சோரியாசிஸ் நோய்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இன்னும் இதற்கான ஒரு முழு தீர்வு அளிக்கும் சிகிச்சை முறை எட்டப்படவில்லை. எனவே நோயை மாற்றியமைக்கும் அல்லது தீவிரத்தை குறைக்கும் சிகிச்சைகளே நடைமுறையில் உள்ளன. நியூரீபிக்ஸ் பீட்டா குளுக்கான்களைப் பயன்படுத்தி நடத்திய முந்தைய மருத்துவ ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்ட, ஜப்பானிய விஞ்ஞானிகளின் அறிக்கைகளின் அடிப்படையில், டாக்டர் ததேயுஸ் 30 நோயாளிகளுக்கு இந்த சோதனையை நடத்தினார்; அவர்களில் 20 பேர் வழக்கமான சிகிச்சைகளுடன் நியூ ரீபிக்ஸ் உட்கொண்டனர், மற்ற 10 பேர் வழக்கமான சிகிச்சைகளை மட்டுமே மேற்கொண்டனர். ஆய்வில், நியூரீபிக்ஸ் உட்கொண்ட 80% நோயாளிகள் தங்கள் தோல் நிலையில் முன்னேற்றங்களை உணர்ந்தனர். தோலில் லிம்போசைட்டுகளின் ஊடுருவல், தோல் தடிமன், புண்களின் வீரியம், ஆகியவை வழக்கமான சிகிச்சையை மட்டுமே எடுத்துக்கொண்டவர்களைவிட நியூ ரீபிக்ஸ் உட்கொண்டவர்களில் கணிசமாகக் குறைந்தது. சோரியாசிஸ் நோயின் தீவிரத்தை மதிப்பிடுவதற்கான PASI ஸ்கோரும் நியூரீபிக்ஸ் குழுவில் கணிசமாகக் குறைந்துள்ளது. டாக்டர் ததேயுஸ், அக்டோபர் மாதம் உலக தடிப்புத் தோல் அழற்சி தினத்தை (World Psoriasis Day) நினைவுகூரும் வகையில் ஒரு சர்வதேச கருத்தரங்கை ஏற்பாடு செய்யவும் அதில் இந்த ஆராய்ச்சி முடிவுகளை பகிரவும் திட்டமிட்டுள்ளார்.
2009 இல் ஜப்பானில் தொடங்கிய, ஆரோபாசிடியம் புலுலன்ஸ் மூலம் தயாரிக்கப்படும் பீட்டா குளுக்கான் குறித்த ஆராய்ச்சி, KK-Ay எலிகள், SD எலிகள், NASH மற்றும் mdx எலிகளில் பாதுகாப்பை மட்டுமின்றி, நியூரீபிக்ஸ், நோயெதிர்ப்பு சக்தியை பயனுள்ள வகையில் மாற்றுகின்றதையும் உறுதிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஆரோக்கியமான தன்னார்வலர்கள் மற்றும் டச்சேன் தசைநார் சிதைவு (டிஎம்டி- DMD) நோயாளிகளில் நடத்திய மருத்துவ ஆய்வுகள், நியூரீபிக்ஸ், குடல் நுண்ணுயிரிகளை மறுசீரமைப்பதன் மூலமும், பல நோயாளிகளுக்கு பலன் அளித்ததோடு இப்போது சோரியாசிஸ் நோயாளிகளுக்கும் ஒரு நம்பிக்கையாக உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
- தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி, நிலைய முதல்வர் (Dean), டாக்டர் ஜி.சிவக்குமார், அவர்களின் ஆதரவு மற்றும் ஆலோசனையுடன் இந்த செய்தி தொகுப்பு வெளியிடப்படுகிறது.
மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும்:
டாக்டர். ஜே. ததேயுஸ், Mobs: +91 9791444661
jtskintut@gmail.com
மரு.ததேயுஸ், தோல் மருத்துவப் பேராசிரியர் (நடுவில்), அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை; மரு. சந்திய வதனா (வலது) & மரு. ஜோசுவா ததேயுஸ் (இடது), ஆய்வின் இணை ஆராய்ச்சியாளர்கள்.
டாக்டர். இச்சிரோ மியுரா, மருத்துவ ஆய்வுகள் மற்றும் நோயியல், ஓபிஹிரோ மருத்துவமனை, ஹொக்கைடோ, ஜப்பான், தோல் பயாப்ஸிகளின் லிம்போசைட் ஊடுருவலை மதிப்பீடு செய்தவர்.
டாக்டர். ஜே. சுரேஷ் துரை, நோயியல் பேராசிரியர் மற்றும் துணை முதல்வர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி; அவரது ஆய்வகம் மருத்துவ ஆய்வின் தோல் பயாப்ஸிகளை செயலாக்கியது.